காரில் கருகிய நிலையில் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விராலிப்பட்டி பாலத்தின் கீழ் புறம் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். அப்போது காரின் பின் இருக்கையில் கருகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் […]
