பரமத்தி வேலூரில் தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி வேலூர் அருகே உள்ள ஆதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பூபதி-கீதா. பூபதி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கீதா கூலி வேலை செய்து வருகிறார்.இத்தம்பதியருக்கு கவுசிக்(7) என்ற ஆண் குழந்தையும் வித்யபாரதி(5) என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கீதா தனது இரு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைகளுக்கு தீ வைத்து […]
