நாகர்கோவில் செட்டிகுளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 10 அடி ஆழமுடைய தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த தொழிலாளி செல்வம் என்பவர் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது பெயிண்ட் வாசம் தாங்க முடியாமல் செல்வம் திடீரென மயங்கி தொட்டியில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் மாவட்ட தீயணைப்பு அதிகாரி […]
