தீயணைப்பு வீரர்களின் வீரவணக்க நினைவுச் சின்னத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சமூகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டிடும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. […]
