ஆற்றில் காணாமல்போன சிறுவனை தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் ஹரிஷ் என்ற சிறுவர்கள் நேற்று முன்தினம் காலை அடையாறு ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் ஆற்றில் குளிக்கும் பொழுது காணாமல் போயுள்ளனர். இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தீயணைப்பு படையினர் விரைவாக வந்து ரப்பர் படகுகள் மூலமாக காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த […]
