கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 குடும்பங்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணை நிரம்பி மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் செண்பகராமன்புதூர் பெரிய குளத்திற்கு சென்றடைகிறது. இதையடுத்து நேற்று பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் அருகில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு வெள்ளம் புகுந்து பல இடங்களில் சுற்றி இறுதியாக பெரிய குளத்தை அடைகிறது. மேலும் தனியார் கல்லூரி […]
