சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக தம்பதியினர் உயிர் தப்பி விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாராயணபுரம் பகுதியில் சரவணன்-சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவியுடன் சரவணன் சாத்தூருக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு உள்ளார். அப்போது தாயில்பட்டி அருகே தேநீர் அருந்துவதற்காக காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றனர். இதனை அடுத்து சற்று நேரத்தில் காரில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பின்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சரவணன் […]
