தீ விபத்தை தடுப்பதற்காக கோவில் ஊழியருக்கு தீயணைப்புத் துறையினர் பயிற்சி கொடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தால் கோவில் கருவறை மேற்கூரை எரிந்து நாசமானது. இதுபோன்று சம்பவம் இனி நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் உள்ள நாகராஜா கோவில் ஊழியருக்கு தீயணைப்பு துறை அதிகாரி இமானுவேல் பயிற்சி கொடுத்துள்ளார். […]
