புதுவையில் 1,060 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்புத் துறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அனைத்துத் துறையிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், தீயணைப்புத் துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. ஆகவே பெண்களுக்கும் தீயணைப்புத் துறையில் வாய்ப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் கோரிக்கை விடுத்தார். அதன்பின் ஒரு […]
