விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலையில் எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்தில் இயந்திரம் எரிந்து சேதமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி-நாரணாபுரம் சாலையில் மணி என்பவர் சொந்தமாக தீப்பெட்டி ஆலை வைத்து செயல்படுத்தி வருகிறார். அந்த ஆலையில் இயந்திரம் மூலம் தீப்பெட்டிகள் தயாரிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து நேற்று மதியம் 1.30 மணி அளவில் தீக்குச்சிகள் தயாரிக்கும் இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக […]
