நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிட்டங்கின் அருகே நின்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரிசி கிட்டங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் லாரி ஒன்று ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றுவதற்காக கிடங்கின் அருகே நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக உத்தமபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ […]
