சென்னை மாவட்டத்தில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் தனது மனைவி திவ்யா, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் காரில் தேனாம்பேட்டையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த காரை திவ்யா ஓட்டினார். இந்நிலையில் கிண்டி நோக்கி செல்லும் கத்திப்பாரா மேம்பால சாலையில் சென்ற போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. […]
