சிறுமி ஒருவர் தீபாவளிக்கு புது ஆடை வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவருக்கு அமுதா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று அமுதா தனது தந்தையிடம் புதிய ஆடை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் புத்தாடை வாங்க தன்னிடம் பணம் இல்லை என்பதால், பொங்கலுக்கு உடை வாங்கி தருவதாக தனது மகளிடம் குருசாமி கூறியுள்ளார். […]
