தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கிராமம் பஞ்சாகுளம் கிராமத்தில் சென்ற 2 ஆண்டுகளுக்கு முன் கோவில் திருவிழா மற்றும் திருமண நிகழ்வின்போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டதில் இருந்தே ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பெண்களையும், குழந்தைகளையும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கேலி […]
