ஆரணி தாலுக்கா அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தாலுகாவிற்குட்பட்ட தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மீரா. இத்தம்பதியினருக்கு மௌலீஸ்வரி என்ற மகள் இருக்கின்றார். ரமேஷும் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் ரமேஷ் மீராவை தினமும் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது. இதனால் மனமுடைந்த மீரா கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அவரிடம் இருந்து எங்களை மீட்க வேண்டும் எனக் கூறி […]
