மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது மனு கொடுப்பதற்காக வந்திருந்த ஒரு மூதாட்டி திடீரென மண்ணெணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். […]
