தாலுகா அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கூடமலை ஊராட்சி 6+வது வார்டில் விவசாய கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கடம்பூரில் இருந்து கூடமலைக்கு செல்லும் சாலையில் இருக்கும் கோவில் பாதையை சிலர் அடைத்ததோடு, அங்குள்ள ஓடையை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
