தி.மு.க கவுன்சிலரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியில் வசித்து வருபவர் வீரா (32). இவர் சமீப காலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலராக சுயேச்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் இவர் தி.மு.கவில் சேர்ந்துகொண்டார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி இரவு வீரா தனது குழந்தைகளுடன் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள சூப்பர் […]
