புதுடில்லியில் இருக்கும் தி.மு.க அலுவலகத்தின் திறப்பு விழாஇன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் அறிஞர் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை கலைஞர் கருணாநிதி கட்டினார். ஒரு கட்சி அலுவலகத்திற்கு வேண்டிய அனைத்து தகுதிகளும் அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ளது. இதைப்போன்று அறிஞர் அண்ணா அறிவாலயம் புது டெல்லியிலும் கட்டப்பட்டுள்ளது. புதுடெல்லியில் கட்சி அலுவலகம் அமைக்க பாராளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் புதுடெல்லியில் இடம் […]
