மனைவிக்கு சீட் கிடைக்காததால் கணவன் தற்கொலை முற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி பகுதியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் மேயர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் தி.மு.க வை சேர்ந்த 2 பெண் கவுன்சிலர்கள் போட்டியிட்டனர். ஆனால் கட்சி நிர்வாகம் தி.மு.க கவுன்சிலர் சுந்தரியை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது. இருப்பினும் சுந்தரிக்கு எதிராக கீதா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். […]
