தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்று 21 மாநகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் போன்றவற்றிற்கு அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக 60.70 சதவீதம் வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகின. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. மேலும் 3 அடுக்கு […]
