தி.நகர் ஸ்கைவாக் திட்டப் பணிகள் 90% முடிவடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விஷயங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் தி.நகர் ஸ்கைவாக் பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கபட்டதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் தினம்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல்களும், மக்கள் கூட்டமும் நிறைந்து காணப்படும் பகுதி தி.நகர். அதிலும் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ளே சென்று விட்டாலே எப்போது வெளியே வருவோம் […]
