பிரபல தொகுப்பாளினி திவ்யா மேனன் சித்ராவுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரபல தொகுப்பாளினியான திவ்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ராவுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு அவரை நினைவு கூர்ந்துள்ளார். […]
