நாட்டின் தலைநகரான தில்லியில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நாளை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4ம் தேதி வரை மதுபானம் விற்பனைக்குத் தடைவிதித்து தில்லி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லி மாநகராட்சியிலுள்ள 250 வார்டுகளுக்கும் டிசம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து பதிவான வாக்குகள் டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தோ்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு […]
