காரில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமரும், அவருடைய நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலாக்காக சென்றுள்ளனர். இவர்கள் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்க்கும்போது காரிலிருந்து 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 5,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குலசேகரம் காவல்நிலையத்தில் ராமர் […]
