பிக்பாஸ் நிகழ்ச்சியின் திறன் மேலாளரார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் திறன் மேலாளராக பணியாற்றி வந்த 23 வயதே ஆன பிஸ்தா தகட் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் ஷூட்டிங்கில் பங்கேற்ற பின் இரவில் உதவியாளருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்துள்ளனர். அப்போது வந்த வாகனம் ஒன்று பிஸ்தா தகட்டின் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
