மூளை காய்ச்சலால் பாதிப்படைந்த நடிகை மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரபலமான நடிகையாகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் டெனிஸ் டோர்ஸ். இவர் கடந்த சில மாதங்களாக மூளை காய்ச்சல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய சகோதரி டிரேசி தற்போது இணையதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய சகோதரி டெனிஸ் மூளைச்சாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பதை நான் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சகோதரிக்காக பிரார்த்தனை […]
