அண்மையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ஆன்மீக நிகழ்வுகளை தமிழ்நாட்டில் உள்ள சில கோயில்களில் பாஜகவினர் திரையில் ஒளிபரப்பு செய்தனர். கட்சி சார்ந்த நிகழ்வுகளை அனைவருக்கும் பொதுவான ஆன்மீக தளங்களில் திரை இட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரகாண்டில் கேதார்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றியதையும், தமிழகத்தில் உள்ள திருவரங்கம் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ராமேஸ்வரம் […]
