திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என மத்திய சான்றிப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சுவரொட்டிகள், பத்திரிக்கை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களின் சான்றிதழ் வகையை கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். அதாவது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் ஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. […]
