பிரபல தமிழ் சினிமா விமர்சகரும் தொகுப்பாளருமான கௌஷிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் .பொறியியல் படித்துள்ள கௌசிக் சினிமா மீதான ஆர்வத்தால் அந்தத் துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பை முடித்து பிரபல ஊடகங்களில் பணியாற்றி வந்தார். தனியார் ஊடகங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த கௌஷிக் சமூக வலைத்தளங்களில் சினிமா தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் ஆக்டிவாக இருந்தவர். இதனிடையே, நேற்று திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளார் கௌசிக். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்த சம்பவம் […]
