திரைப்பட தணிக்கை திருத்த சட்ட மசோதாவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவின் நட்பு நாடுகள் உடனான முரண்கள் பற்றி படம் எடுக்க முடியாது. இலங்கை அரசு தொடர்பாகவோ, அங்கு நடந்த இனப்படுகொலையை பற்றியோ ஒரு வரி கூட பேச முடியாது. வரும் காலங்களில் ஒன்றிய அரசின் எண்ணங்களுக்கு ஏற்ப தான் படங்களை எடுக்க வேண்டும் என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்ற விமர்சனம் செய்துள்ளார்.
