தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் திரைப்படம் திரையிடல் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மாணவர்கள் பின்னாளில் தொழில் முறை கலைஞர்களாக வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கத்தில் பல்வேறு கலை செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகின்றது. அதன்படி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் திரையிடல் திட்டம் -சீறார் திரைப்பட விழா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது. காட்சி ஊடகம் மூலமாக உலகத்தை புதிய […]
