பிரேசில் நாட்டின் விமான நிலையத்தில் இருக்கும் தகவல் திரையில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருக்கும் ஒரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விமானங்களின் வருகை தொடர்பான தகவல்களை தெரிவிக்க கூடிய திரையில் திடீரென்று ஆபாசப்படம் ஒளிபரப்பாகியது. இது பயணிகளையும் விமான நிலைய பணியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பயணிகள் சிலர் அதனை பார்த்து சிரித்துக்கொண்டே சென்று விட்டனர். எனினும் அதிகமானோர் முகம் சுளித்தனர். மேலும் […]
