அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மாநகர் மாவட்டத்தில் கழக செயல் வீரர்களின் கூட்டம் வள்ளத்தில் நடைபெற்றது. கழக துணை பொதுச்செயலாளர் திரு. எம். ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். […]
