அத்தியாவசிய பணிகள் மற்றும் அவசர பணிகளில் பணியாற்றுவோர்க்காக சென்னையின் முக்கிய வழித்தடங்களில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த அறிவிப்பை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டிருக்கிறார். இன்று தொடங்கி இனி வரும் 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நாட்களில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வகையில் பல்வேறு […]
