திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் தடை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதன்பிறகு ஜனவரி முதல் மே மாதம் வரை வசந்த காலம் நிலவுகிறது. இந்த நேரத்தில் பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் கூடலூர் பகுதியில் இருக்கும் கோயில்களில் திருவிழா நடத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள் […]
