திருவிடைமருதூர் கோவில்கள் நிறைந்த தொகுதியாகும். மகாலிங்கேஸ்வரர், திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயம் இங்கு அமைந்துள்ளன. நவகிரக தலங்களான சூரியனார் கோவில், அக்னீஸ்வரர் ஆலயம் போன்றவையும் இங்கு உள்ளன. தொகுதியின் முக்கிய தொழில்களாக விவசாயமும், கைத்தறி பட்டு நெசவுத் தொழிலும் உள்ளன. பட்டுப் புடவைகளுக்கு புகழ்பெற்ற திருபுவனம் இங்குதான் உள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் 1977 முதல் இதுவரை நடைபெற்ற 10 தேர்தல்களில் 6 முறை திமுக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.தொகுதியின் […]
