நுழைவுத்தேர்வு ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரதிதாசன் அரசு கல்லூரியில் வைத்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமாக விளங்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை பாதியாக குறைத்து வழங்குவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கல்லூரி […]
