வாய்த்தகராறு காரணமாக மருமகனுக்காக பேசிய விவசாயி ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூந்தோட்டம், ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் 60வயதான இவர் ஒரு விவசாயி. இவருடைய மருமகன் ராஜீவ்காந்திக்கும், இவரது தந்தை பொன்னுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து […]
