நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் காரைக்காலுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று மதுபானங்களை வாங்கி வந்துள்ளனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
