சுகாதாரமற்ற பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் அபராதம் விதித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்றல் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி […]
