Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஸ்டாலின் அரசியலில் முதிர்ச்சியில்லாமல் நடந்துகொள்ளக்கூடாது – அமைச்சர் காமராஜ்

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்ளக்கூடாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சக்குடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு 1,116 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அவர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவிற்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அச்சப்படுவதாகவும் அதனால் அவர் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை – ரூ.1 லட்சம் பறிமுதல்

நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர். கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பத்திர பதிவிறக்கு  அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று இரவு நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு விற்பனை …!!

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் அறநிலையத் துறையினரின் ஒத்துழைப்போடு தனியாருக்கு விற்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சைவ சமயத்தையின் தலைமைப்பீடம் எனப் போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 1,000 ஏக்கருக்கும் மேல் நிலம் இருந்து வருகின்றது. இவற்றில் சிலவற்றை ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலைகள் ஆலயத்தில் நிர்வாக அதிகாரியாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் இளைஞரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கும்பல் ….!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே இளைஞரை 9 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டுத்தாக்குடி அருகே செங்கமேடு தெருவில் வசித்து வந்தவர் காளிதாஸ் அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடித்து விட்டு தெருவில் நடந்து சென்றபோது செல்வம் என்பவர் வீட்டில் இருக்கும் நாய் குறைத்ததாக கூறி தனது நண்பர்களுடன் செல்வத்தின் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் தலைமறைவான அவர் முன்ஜாமீன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் தாக்‍குதலில் அமமுக நிர்வாகியின் தந்தை காயம் …!!

திருவாரூர் அமமுக நிர்வாகி திரு. மணிகண்டனின் தந்தையை காவல்துறையினர் அத்துமீறி தாக்கியதில் நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு. மணிகண்டனின் வீட்டுற்குள் நள்ளிரவில் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது அதிர்ச்சியிலிருந்து திரு. ராமச்சந்திரனை போலீசார் தாக்கியதில் காயம் அடைந்தார். மேலும் அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்படுத்தி அடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுரிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |