சோழர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ கோவிலும், ஆசியாவின் மிகப்பெரிய ஆழித்தேரும் திருவாரூர் சிறப்பு அம்சங்களாகும். விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இந்த பகுதியில் நெல், பருத்தி, பயறு, உளுந்து போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் பிறந்த பகுதியாகும். திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் 1962ஆம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. திமுக 7 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் வென்றுள்ளன. கால்நூற்றாண்டாக திமுகவின் கோட்டையாக திகழும் திருவாரூர் […]
