திருவல்லிக்கேணி தொகுதியில் திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சியானது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இதனையடுத்து உதயநிதியின் தாயார் மற்றும் கிருத்திகா உதயநிதி இருவரும் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் சாதனங்களை வழங்கியபின்னர் கிருத்திகா உதயநிதி பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்பொழுது பத்திரிகையாளர்களில் ஒருவர் கிருத்திகா உதயநிதியிடம், “திருநங்கைகளுக்கும் 50% அரசியல் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிருத்திகா உதயநிதி, “அரசியலில் நான் […]
