கொச்சியில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மலையாள நடிகை அஸ்வதி பாபு, காதலனுடன் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை அஸ்வதி பாபு (26), ஏராளமான மலையாள படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகை அஸ்வதி பாபு, காதலன் நவுபல்வுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது 2 பேரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல அந்த கார் அதிவேகத்தில் பாய்ந்து சென்றது. […]
