பிரசவ வலியில் துடித்த பெண்ணிற்கு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் சிவா-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த சத்யா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் சத்யாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சத்யாவிற்கு ஆம்புலன்சில் செல்லும் போதே திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேறுவழியின்றி ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சத்யாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். […]
