Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணிக்கு சென்றிருந்த இடத்தில்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி தினகரன் நரியம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் உரம் போடும் பணிக்கு சென்றிருந்தார். அப்போது தினகரனை பாம்பு கடித்துவிட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தினகரனை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகைகள்…. டிரைவர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோ. புதூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கல்லூரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அவலூர்பேட்டை சாலையில் வாடகை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின்கம்பி…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவரடியார்குப்பம் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காசி வீட்டின் முன்பு உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மேலே இருந்த மின்சார கம்பியில் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி காசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தானிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பென்ஷன் தாரர்களே அலர்ட்…. “இவருக்கு பென்ஷன் கிடையாது”…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!@

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரணியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1975 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி உயிரோடு இருந்தபோது அவருடைய தங்கையை இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டார். இது அவருடைய முதல் மனைவிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் பணி ஓய்வு பெற்று அவருக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து தனுஷ்கோடி கடந்த 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனால் அவருடைய பென்ஷன் […]

Categories
மாநில செய்திகள்

புறம்போக்கு நிலத்தில் அரசு கட்டிடமா…? மாவட்ட ஆட்சியருக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்  திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் ஏரி, ரேடியோ பூங்கா போன்ற இடங்களில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலையங்களுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது என அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரனார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முதியோர் உதவித்தொகை பெற்று தரணுமா?… அப்போ லஞ்சம் தாங்க…. மாட்டி கொண்ட வருவாய் ஆய்வாளர்…. பரபரப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஊசாம்பாடி பகுதியில் வசித்து வரும் சுலோச்சனா,கனகா மற்றும் குப்பு ஆகிய 3 பெண்களும் முதியோர்உதவித்தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு சென்ற 4 மாதங்களுக்கு முன் உதவித்தொகை திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேரும் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகமானது புது மல்லவாடி வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகத்தை விசாரணைக்காக அனுப்பிவைத்துள்ளது. இதில் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வியாபாரத்திற்கு சென்ற வியாபாரி…. காணாமல் போன நகை, பணம்…. போலீஸ் வலைவீச்சு….!!

பழ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்னம்மாள் நகர் பகுதியில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முருகதாஸ் தனது மனைவியுடன் வழக்கம்போல் வெளியே வியாபாரத்துக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேக்கரி கடைக்குள் புகுந்த கார்…. 4 பேர் காயம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

சாலையோரம் இருந்த பேக்கரி கடைக்குள் கார் புகுந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள அடுக்கு மலை என்னும் கிராமத்தை சேர்ந்த மணி மகன் மணிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூர் அருகே மழவந்தாங்கல்  கிராமம் விழுப்புரம் திருவண்ணாமலை சாலை கூட்டு ரோட்டில் பேக்கரி கடை ஒன்றை  நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பேக்கரியில் மணிபாரதி அவரது மனைவி பூமல்லி  போன்றோர் இருந்தனர். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிரரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்மணி புறவழிச்சாலை அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அத்திமூர் பகுதியில் வசிக்கும் முருகன், ரோஹித் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி கொண்ட அரசு பேருந்துகள்…. 17 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 17 பேர் பலத்த காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்ப தாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்துகள் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து எதிரில் சென்னை எழும்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டு பேருந்துகளும் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டது. இதனால் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் அம்பிகா, சிவசங்கரி, விஜயா, லட்சுமி உள்ளிட்ட 5 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் போலீஸ் விசாரணை….!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செம்மாம்பாடி கிராமத்தில் மண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மண்ணு உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் விரக்தி அடைந்த மண்ணு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பகீர்!….அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து…. 17 பேர் காயம்…. பயங்கர சம்பவம்….!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகில் அபதாங்கள் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது.  அப்போது சென்னையிலிருந்து போளூர் நோக்கி வந்த  அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  5 பெண்கள், 7 ஆண்கள், 3 சிறுவர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன், பாஸ்கர் மற்றும் நடத்துனர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் கடுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆரணி அரசு […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி….. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிர்ச்சி உத்தரவு….!!!!!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டதில் கருவுற்றுள்ளார். இந்த நிலையில் அவரது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் பாதிக்கப்பட்டவரின் மனம், உடல் நலம் மருத்துவர்களின் பரிந்துரையை கருத்தில் கொண்டு 20 வாரங்களை கடந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென நடத்தப்பட்ட ஆய்வு…. விடுதி வார்டன் பணியிடைநீக்கம்…. கலெக்டர் உத்தரவு….!!

அரசு மாணவர் விடுதி வார்டனை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. அந்த விடுதியில் ரவி என்பவர் வார்டனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவர் விடுதியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள 23 மாணவர்களில் 13 மாணவர்கள் மட்டும் விடுதியில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் முறையான ஆவணங்கள் விடுதியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் குப்பையை கொட்டாதீங்க…. மீறினால் நடவடிக்கை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆனிமாத பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. இதில் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டதால் பல இடங்களில் குப்பைகள் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பாக கிரிவலப்பாதை, மாடவீதி மற்றும் அருணாசலேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் வாயிலாக குப்பைகள் அகற்றும் பணி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

10 ஐம்பொன் சிலைகள் மாயம்…. அதிர்ச்சியடைந்த பழங்குடியின மக்கள்…. போலீஸ் விசாரணை….!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே மலமஞ்சனூர் கிராமம் இருக்கிறது. இப்பகுதியில் பெரும்பாலும் குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குலதெய்வமான வீரபத்திர சாமியை வணங்கி வருகின்றனர். மலமஞ்சனூர் கிராமத்திலுள்ள பச்சையம்மன் கோயில் அருகில் ஒரு மலை இருக்கிறது. இந்த மலை மீது தான் குருமன்ஸ்இன மக்கள் 3 வருடங்களுக்கு ஒரு முறை வீரபத்திர சாமிக்கு விழா நடத்துவது வழக்கம் ஆகும். இவ்விழாவிற்கான சுவாமி சிலைகளை அங்குள்ள பாறையின் குகைப்பகுதியில் பத்திரமாக வைத்திருப்பார்கள். […]

Categories
Uncategorized

“குஷியோ குஷி” இந்த மாவட்டத்தில் இன்று 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். இங்கு உள்மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதிலும் விடுமுறை தினங்கள் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. இதனால் கிரிவலத்திற்காக வரும் பொது மக்களுடைய வசதிக்காக விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பௌர்ணமி அன்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஆட்டுபட்டியில் இருந்த 15 ஆடுகள்”…. மர்ம விலங்கு கடித்து உயிரிழப்பு….!!!!!

ஆட்டுப்பட்டியில் இருந்த 15 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள வேட்டவலத்தை அடுத்து இருக்கும் காட்டேரி ஊராட்சியை சேர்ந்தவர்கள் கண்ணன் மற்றும் முனுசாமி. இவர்கள் 130 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஆட்டுப்பட்டி அமைத்து வளர்த்து வருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது முனுசாமியின் பட்டியலில் இருந்த பத்து ஆடுகளும் கண்ணன் பட்டியலில் இருந்த ஐந்து ஆடுகளும் குடல் சரிந்த […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

I don’t care….. மிரட்டி விட்ட முதல்வர் ஸ்டாலின்….. திருவண்ணாமலையில் அதிரடி பேச்சு…..!!!

மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நுழைவாயில் மற்றும் முத்தமிழ் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து இன்று திருவண்ணாமலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: “திருவண்ணாமலை கோயில் சொத்துக்களை கட்டி காத்தது திமுக தான். மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலத்துக்காக வருகை தரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரும். அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் சொத்து. மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த ஏழுமலையை உடனடியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- தனியார் பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் பிரபு(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது நண்பரான நவீன்குமார்(22) என்பவருடன் சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. வெளிநாட்டில் வேலை…. ரூ.4 1/2 லட்சம் அபேஸ்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருவண்ணாமலை வந்தவாசி தாலுகா கீழ்வில்லிவல்லம் கிராமத்தில் திவ்யா பிரவினா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் பிஎஸ்சி நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சுசாக பணியாற்றி வருகிறேன். அதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பு குறித்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்திருந்தேன். அந்த ஆண்டு ஜூன் மாதம் ஈமெயில் முகவரி மூலம் ஒரு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாநில அரசு, குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு…. இனி வீடுதேடி வரும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மாநில அரசு ஓய்வூதியமும், குடும்ப ஓய்வூதியமும் பெறுவோர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம்  தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும், தமிழ்நாடு அரசும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் எவ்வித சிரமமும் இன்றி தங்களின் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் அரசுக்கு சமர்ப்பிக்கலாம். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடியே 36 லட்சம் கையாடல்…. வசமாக சிக்கிய ஊழியர்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!!

திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செ.சொர்பனந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயனாளிகளுக்கு கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 1 கோடியே 36 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் பெறப்பட்டது. இதனால் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின் இதில் தொடர்புடைய கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்த சீனுவாசன், எழுத்தராக பணியாற்றிய வெங்கடேசன், ஊழியர் விஜி ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் மங்கலத்தில் இருந்து சோமாசிபாடி சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் திடீரென ஏரியில் கவிழ்ந்து பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதுராகுப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு தங்கராசு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது பம்புசெட்டில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. திடீரென விஷம் குடித்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடக்கொல்லை மேடு கிராமத்தில் பழணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த விஜயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த திட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு-போளூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் அன்பழகன், தசரதன், நகர, வட்டார நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் , இளைஞர் அணி பொறுப்பாளர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய ஜீப்…. உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் படுகாயம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வலவிடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி(32) என்பவர் கடலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக( பயிற்சி) இருக்கிறார். இவர் நேற்று மாலை குடும்பத்தினருடன் ஜீப்பில் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். இந்த ஜீப்பை போலீஸ்காரர் தமிழ்குமரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கூட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லோகேஷ் என்ற சிறுவன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…. தம்பதியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டுவந்தாங்கள் கிராமத்தில் வரதராஜுலு -தனலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனலட்சுமி வீட்டில் உள்ள கழிவறையில் திடீரென வழுக்கி  விழுந்தார். இதில் படுகாயமடைந்து தனலட்சுமியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வரதராஜுலு, தனலட்சுமி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டிட வேலைக்கு சென்ற பெண்…, திடீரென நடந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாடியில் இருந்து  தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சாவித்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  நேற்று லோகு என்பவர் வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சாவித்திரி 1- வது மாடியில் இருந்து  தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த சாவித்திரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நண்பனுடன் சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பவுன்குமார் தனது நண்பரான சம்பத் என்பவருடன் சேர்ந்து திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்குமாரின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குமாரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற வாலிபர்…. சகோதரர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபரை கத்தியால் குத்திய 2  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்கழனி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர் அஜித்குமாரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதனால் அஜித்குமாருக்கு லோகேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அஜித்குமார் நேற்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லோகேஷ் மற்றும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறை நாள் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ஜெயம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  அறிக்கை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நல்லான்பிள்ளைபெற்றான் பகுதியில் ஓட்டுநரான தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தினகரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோவிலில் கேட்ட அழுகுரல்…. பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கோவிலில் விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அத்தியந்தல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை கேட்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கட்டைப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போதையில் ரகளை செய்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

கஞ்சா போதையில் வாலிபர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் தங்கியுள்ளனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இன்று பழனியாண்டவர் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சாதுக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மேலிருந்து விழுந்த ஸ்பீக்கர் பாக்ஸ்…. குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

3 மாத பெண் குழந்தையின் மீது ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிச்சானந்தல் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மாத பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் விஜய் அந்த பெண் குழந்தையை வீட்டின் தரையில் படுக்க வைத்திருந்தார். அப்போது வீட்டின் பரணில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் எதிர்பாரதவிதமாக தரையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது. இதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலை ஏற்க மறுத்த மாணவி…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

காதலை ஏற்க மறுத்த மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கடலாடி பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனையடுத்து மேல்பாலூர் கிராமத்தில் வசிக்கும் தமிழ்வாணன் என்பவர் கடந்த 2 வருடங்களாக கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் தமிழ்வாணன் அடிக்கடி மாணவியிடம் தன் காதலை ஏற்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த 2 பேர்…. திருவண்ணாமலையில் கோரவிபத்து….!!

பார்சல் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வி.புரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள  வேட்டவலத்தில் விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வீரன் என்பவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அப்போது பெருமாளின் உறவினரான கர்ணன் என்பவரின் மனைவி கலா என்பவர் தன்னுடன் வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள உறவினர்களைப் பார்த்து விட்டு செல்லுமாறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. நெசவு தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

நெசவு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன், கார்த்திகேயன், குமார் என 3 மகன்கள் உள்ளனர். மேலும் சண்முகத்திற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் கணவன்-மனைவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் பூட்டு…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சொரகொளத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அந்த கடையில் அப்பகுதியில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவர் மேற்பார்வையாளராகவும், 3 பேர் விற்பனையாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து மறுநாள் காலையில் சிவராமகிருஷ்ணனுக்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து கீழே இறங்கிய கட்டிட மேஸ்திரி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவருக்கு பத்மா என்ற மனைவி உள்ளார். கடந்த 9-ஆம் தேதி விஜயகுமார் வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வரும்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் விஜயகுமாருக்கு காயம் எதுவும் ஏற்படாததால் பத்மா அவரை அறையில் படுக்க வைத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. 2 பேருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோழவரம் கிராமத்தில் அருள்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருள்நாதன் தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு எர்ணாமங்கலம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது மாமா சுப்பிரமணி என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது பூவாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ராஜ்குமார் அவரது மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சோழபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நகை திருட்டு…. உரிமையாளர்கள் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

1 1/2 பவுன் தங்க நகை மற்றும் 4 செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அன்மருதை கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கீர்த்தனா தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கீர்த்தனாவின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை திருடி சென்றுவிட்டார். மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்…. மர்மநபர் செய்த வேலை…. போலீஸ் வலைவீச்சு….!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவியம்தாங்கல் கிராமத்தில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்து என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் உள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சிந்துவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை நைஸாக திருடியுள்ளார். இதனையடுத்து திடீரென விழித்து பார்த்த சிந்து ‘திருடன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடனடியாக அகற்ற வேண்டும்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் பகுதியில் பாலாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில்  அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மருந்து கழிவுகள், குப்பை போன்றவற்றை கொட்டுகின்றனர். இதனால் அந்த குப்பைகள் மண்ணுக்குள் புதைந்து மக்கள் குடிக்கும் குடிநீரில் கலந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் எனவும்  அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!… லாரி கவிழ்ந்து” 45 ஆயிரம் முட்டைகள் சேதம்” போலீஸ் விசாரணை….!!!!

சாலை ஓரம் கவிழ்ந்த லாரியை  காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம்  அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில்  அன்சர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மினி லாரியில் நாமக்கல்லில் இருந்து சுமார் 45 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு வடதொரசலூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குறைதீர்வு நாள் கூட்டமன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம்”…. தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை….!!!!

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் அன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வருகின்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குறைகளை மனுக்களில் எழுதி தந்துவிட்டு செல்வர். இதில் வாரத்திற்கு இரண்டு பேராவது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்கின்றார்கள். தீக்குளிக்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில்….. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் தர்மலிங்க நகரில் தச்சுத் தொழிலாளியான மோகன்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகனுக்கு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 26-ஆம் தேதி மாடியிலிருந்து மோகன் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அருகிலிருந்த குழாய் தண்ணீர் பள்ளத்தில் விழுந்து மோகன் படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மோகனை […]

Categories

Tech |