நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகும். இதன் மூலம் டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் நகராட்சி ஆணையர் ஜீ. தமிழ்ச்செல்வி பழைய பொருட்கள் விற்பனை செய்யும் இரும்பு கடைகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் […]
