திருவண்ணாமலை தீப திருவிழாவில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தீபத் திருவிழாவை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்திவேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகளை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவிக்க […]
