கனமழை காரணமாக தடுப்பணையில் நிரம்பி நீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக நேற்று ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நாகநதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் தடுப்பணை நிரம்பி நீர் வழிகின்றது . இதையடுத்து கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் நீர் தேங்கி ஏரிகால்வாய் மூலம் லேசான நீர் வரத்து ஏற்பட்டது. […]
